25th November 2024 23:29:49 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் கண்டி அருப்பள தர்மசோக வித்தியாலயத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 21 நவம்பர் 2024 நன்கொடை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை சமிக்ஞைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கங்கா ஹேரத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது, 41 மாணவர்கள் பாடசாலை உபகரணங்களை (பெஸ்டல்கள், வண்ண பென்சில்கள், இலங்கை மற்றும் உலக வரைபடங்கள், கணித கருவி பெட்டிகள், கத்தரிக்கோல் மற்றும் பசை) பெற்றுகொண்டனர். மேலும், சிறார்களுக்கான மதிய உணவு பொதிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வின் நிறைவாக பாடசாலை நூலகத்தில் பயன்படும் வகையில் கதைப்புத்தகங்களின் தொகுப்பு பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை சமிக்ஞைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள், சிப்பாய்கள், பாடசாலை அதிபர், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.