24th November 2024 14:40:37 Hours
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவினால் 2024 நவம்பர் 16 அன்று கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த பொதுக்கூட்டம் கனேமுல்ல கொமாண்டோ படையணி தலைமையகத்தில் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
சேவை வனிதையர் பிரிவின் பாடல் பாடி உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டம் தொடங்கியது. தற்போதைய திட்டங்களை மீளாய்வு செய்தல், ராகம ரணவிரு செவனவிற்கான விஜயத்தை திட்டமிடுதல் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு இலஞ்சினையை திருத்துதல் மற்றும் எதிர்கால சந்திப்பு அட்டவணைகளை இறுதி செய்தல் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேஜர் எச்.ஜே.டி பெரேரா ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களுக்கு அவரது பங்களிப்புகளைப் பாராட்டி நினைவு சின்னம் வழங்கப்பட்டதுடன் புதிய அலுவலக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஊக்கமளிக்கும் உரை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நன்கொடைத் திட்டம் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய டிசம்பர் நிகழ்வுகளுக்கான திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
தலைவியின் தலைமையில், உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடலுடன் கூட்டம் நிறைவுற்றது.