Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

22nd November 2024 08:10:19 Hours

இராணுவ சேவை வனிதையரால் நன்கொடை திட்டம்

இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் இராணுவ தலைமையகத்தில் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை வழங்கும் நிகழ்வு 2024 நவம்பர் 21 ஆம் திகதியன்று இடம்பெற்றது. இந்த திட்டத்தினால் இராணுவத்தில் பணியாற்றும் சிவில் ஊழியர்களின் 250 சிறார்கள் பயனடைந்தனர்.

இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம், இராணுவ, சிவில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சுமையைக் குறைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் போது பிரதம அதிதி, சிவில் நிர்வாக பணிப்பாளர் திருமதி ஹாசினி பல்லவல அவர்களிடம் பாடசாலை உபகரணங்களை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக அடையாளமாக கையளித்தார்.

இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.