Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

20th November 2024 12:32:43 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையரால் சமையல் தொடர்பான செயலமர்வு

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினர் நெஸ்லே லங்கா தனியார் நிறுவனத்துடன் இணைந்து 9 நவம்பர் 2024 அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் சமையல் தொடர்பான செயலமர்வை நடாத்தினர். இதன்போது இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இது சிறிய அளவிலான தின்பண்டங்கள் (இனிப்புக்கள்) தொழிலை தொடங்குவதற்கான திறன்களை வழங்கும் வகையில், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் 150 துணைவியார்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. நெஸ்லே லங்கா தனியார் நிறுவனம் இலங்கை இலேசாயுத காலாட் படையணி உணவகங்களில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளுடன், சுயதொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு மானிய விலையில் மூலப்பொருட்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இந் நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.