20th November 2024 12:50:35 Hours
இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மஹாலேகம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 நவம்பர் 17 கரந்தெனிய இராணுவப் புலனாய்வுப் படையணி நிலையத்தில் 26 இராணுவ வீரர்களின் துணைவியர்களுக்கு அத்தியாவசிய மகப்பேறு உதவிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி திருமதி தனுஜா சுபசிங்க, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்குத் தேவைகள் தொடர்பான விரிவுரையை நிகழ்தினார்.
இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.