Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

14th November 2024 16:42:14 Hours

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரால் உலர் உணவு பொதி விநியோகம்

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவு, 2024 நவம்பர் 07 அன்று இலங்கை இராணுவ போர் கருவி படையணி தலைமையகம் மற்றும் போர் கருவி பாடசாலையில் பணியாற்றும் 24 சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை விநியோகித்தது.

இந்த முயற்சி திருமதி. இரேஷா பெர்னாண்டோ மற்றும் வழங்கல் கட்டளை தளபதியும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈ.எம்.எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஏஏடிஓ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது. இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.