14th November 2024 16:37:03 Hours
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தமயந்தி பண்டாரநாயக்க மற்றும் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 11 நவம்பர் 2024 முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் புத்தூர் மத்ஹே பஞ்சசீல வித்தியாலயம் மற்றும் கரவெட்டி ஸ்ரீ நாரத வித்தியாலயத்தின் 97 மாணவர்கள் அவர்களது பாடசாலை வளாகத்தில் பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பங்குபற்றிய 40 ஆசிரியர்களுக்குப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.