Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

14th November 2024 16:29:42 Hours

இராணுவ சேவை வனிதையரால் ராகம ரணவிரு செவனவில் நன்கொடை திட்டம்

இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் 13 நவம்பர் 2024 அன்று அபிமன்சல I, II, III, மிஹிந்து செத்மெதுர மற்றும் ரணவிரு செவன ராகம ஆகிய இடங்களில் சிகிச்சை பெறும் போர்வீர்ரகளுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களால் சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல், கொமட் கதிரைகள், நடைபயிற்சி உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை போர்வீரர்கள் விவகார பணிப்பகம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்திற்கு கையளித்தனர். இந்த நன்கொடைகள் பல்வேறு வசதிகளில் சிகிச்சை பெற்று வரும் போர் வீரர்களின் பராமரிப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவது நோக்கமாகும்.

போர் வீரர்களுடன் கலந்துரையாடிய தலைவி அவர்களின் தேவைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்கள் தொடர்பில் கேட்டறிந்தார். விழாவைக் குறிக்கும் வகையில் குழு படம் எடுக்கப்பட்டது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.