13th November 2024 16:24:08 Hours
இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கல்யாணி விஜேரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சி 09 நவம்பர் 2024 அன்று கொழும்பு இராணுவ மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதியும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் போது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 41 மாணவர்களுக்கு அத்தியாவசிய பாடசாலை பொருட்களுடன் ஆரம்ப வைப்புத் தொகையாக ரூபா 10,000 வழங்கப்பட்டது. இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.