11th November 2024 17:10:44 Hours
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2024 நவம்பர் 08 அன்று பனாகொட படையணி தலையைகத்தில் புத்தகம் வழங்கும் நன்கொடை நிகழ்வு நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கங்கா ஹேரத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வில் மொத்தம் ரூபா 4,803,063.00, க்கும் பெறுமதியான 2,082 புத்தக பொதிகளில் 90 பொதிகள் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் படையினரின் பிள்ளைகளுக்கு அடையாளமாக வழங்கப்பட்டன.
மீதமுள்ள புத்தகப் பொதிகள் ஏனைய கட்டளை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன, அவை அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கதாகும்.
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.