11th November 2024 09:59:16 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் மேற்பார்வையின் கீழ், 2024 நவம்பர் 08 இராணுவத் தலைமையக சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் வன்னி மற்றும் மத்திய பாதுகாப்பு தலைமையகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவம் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு 200 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை பணியாளர்களுக்கு வழங்கினார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.