11th November 2024 09:48:49 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் மேற்பார்வையின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவினர் உயிர் நீத்த போர்வீரர்களின் சேவைக்கு இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்தினர். இராணுவ சேவை வனிதையர் பிரிவு, சர்வதேச லயன்ஸ் கழகத்துடன் இணைந்து 2024 நவம்பர் 08 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொம்பே, இந்தகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவின் தகுதியான ரணவிரு குடும்பத்திற்கு புதிதாக ஒரு வீட்டை நிர்மாணித்தனர்.
இராணுவத் தளபதியுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி சர்வதேச லயன்ஸ் கழக உறுப்பினர்களுடன் பிரதம அதிதியாக நிகழ்வில் கலந்து கொண்டனர். வருகை அவர்களை மறைந்த போர் வீரனின் துணைவியார் மற்றும் அவரது பாடசாலை செல்லும் வயதுடைய மகனும் தாம்பூலம் வழங்கி வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, பிரதம அதிதி, சர்வதேச லயன்ஸ் கழக உறுப்பினர்களுடன் மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் புதிய வீட்டின் சாவியை சம்பிரதாயபூர்வமாக மறைந்த போர்வீரரின் துணைவியார் திருமதி சஞ்சலா சாந்தனி ஹபுதந்திரியிடமும் பாடசாலை செல்லும் வயதுடைய மகனிடமும் கையளித்தார்.
சம்பிரதாயத்திற்கு அமைய பால்பொங்குதல் மற்றும் மங்கள விளக்கேற்றல் போன்றன இடம்பெற்றன.. அதே நேரத்தில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி புதிய வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய தளபாடங்களையும் வழங்கினார்.
இந்த திட்டத்திற்காக காணி வழங்கிய சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் திரு.சிங்க காமினி அவர்களை பாராட்டி, இராணுவத் தளபதிநினைவுச் சின்னம் வழங்கியதுடன் அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். அதன் பின்னர் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி தியவன்னா லயன்ஸ் கழகத்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
மேலும், 306 சீஐ மாவட்ட சர்வதேச லயன்ஸ் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி திரு. சமன் ஜினதாச அவர்கள் இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோரின் திட்டத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்புக்காக பாராட்டுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் இணைப்பதிகாரி பிரிகேடியர் என். மகாவிதான கேஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் தியவன்னா லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.