Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

09th November 2024 19:31:50 Hours

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி பதவியேற்பு

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி சமிந்தி விக்கிரமரத்ன அவர்கள் 2024 நவம்பர் 02 அன்று கொமாண்டோ படையணி தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

நடைபெற்ற நிகழ்வின் போது, புதிய தலைவி தனது நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

சம்பிரதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் பற்றியும், எதிர்கால திட்டங்களுக்கு பிரிவின் தயார் நிலையை உறுதிப்படுத்தவும் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.