08th November 2024 14:56:10 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவினர், 2 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியுடன் இணைந்து, கரந்தெனிய 2 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி கேட்போர் கூடத்தில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தக நன்கொடையை 2024 ஒக்டோபர் 26 ஆம் திகதி வழங்கினர். இந்த நன்கொடை திட்டம் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி பணியாளர்களின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் (க.பொ.த) சாதாரண தர பரீட்சைகளில் சாதனை படைத்த பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்கள் கலந்து கொண்டார். 2023 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய ஐந்து மாணவர்களும் (க.பொ.த) சாதாரண தர பரீட்சையில் 9 ஏ பெற்ற இரண்டு மாணவர்களுக்கு டிஎஸ்ஐ பரிசு வவுச்சர் உட்பட தலா ரூபா 18,000, பெறுமதியான பரிசுகளும் வழங்கப்பட்டன. இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி நூலகத்திற்காக செல்வன் சந்துப எதிரிசிங்க மற்றும் செல்வன் ஷஸ்மித பதிராஜா ஆகியோர் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.