Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

06th November 2024 23:22:15 Hours

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையரின் 106 வது ஆண்டு நிறைவு நிகழ்வில் போதி பூஜை

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவினரின் 106 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2024 ஒக்டோபர் 30 ம் திகதி பனாகொடை ஸ்ரீ போதிராஜராமய விகாரையில் போதி பூஜை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போர் கருவி பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏகே ராஜபக்ஷ ஆர்எஸ்பீ மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி ராஜபக்ஷ ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

வெயாங்கொட மொட்டுன்ன கிரீத்தாராம விகாரையின் பிரதமகுருவான ரத்னபுரே தம்மைஸ்ஸர தேரர் அவர்கள் உயிர்நீத்த போர்வீரர்கள், அங்கவீனமுற்ற படையினர், சேவையாற்றும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மத ஆசிர்வாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.