Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

06th November 2024 23:25:41 Hours

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த பொதுக்கூட்டம்

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த பொதுக்கூட்டம் 29 ஒக்டோபர் 2024 அன்று தம்புள்ளை இயந்திரவியல் காலாட் படையணி தலைமையத்தில் நடைபெற்றது.

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலந்தி வனசிங்க அவர்கள் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தற்போதைய திட்டங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் படையினரின் நலனை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால திட்டங்களை திட்டமிடுதல் போன்றவை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் இயந்திரவியல் காலாட் படையணி பணியாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை தலைவி எடுத்துரைத்தார்.

இக் கூட்டத்தில் இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.