06th November 2024 23:35:33 Hours
இலங்கை பீரங்கிப் படையணியின் 14 வது ரொக்கெட் படையின் உதவியுடன் இலங்கை பீரங்கிப் படையணி சேவை வனிதையர் பிரிவு, சில்வர்மில் அறக்கட்டளையுடன் இணைந்து, 24 ஒக்டோபர் 2024 அன்று கலங்குட்டியவில் நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இத்திட்டத்தின் மூலம் குடும்ப நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 20 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவுப் பொதிகளும், 80 விவசாயிகளுக்கு 700 தென்னம்பிள்ளைகளும் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை பீரங்கிப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சில்வர்மில் அறக்கட்டளையின் தலைவரான மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர (ஓய்வு) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் நன்கொடைக்கான பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.