05th November 2024 18:54:08 Hours
75 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் 2024 நவம்பர் 05 அன்று இராணுவத் தலைமையக சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் யாழ். மற்றும் கிழக்கு பாதுகாப்புப் தலைமையகங்களில் பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ மற்றும் சிவில் பணியாளர்களுக்கு 200 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை பணியாளர்களுக்கு வழங்கினார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.