Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

05th November 2024 19:05:15 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அத்திடிய மிஹிந்து செத் மெதுர போர் வீரர்களை சந்திப்பு

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் 05 நவம்பர் 2024 அன்று அத்திடிய மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியை போர் வீரர் ஒருவர் தாம்பூலம் வழங்கி வரவேற்றார்.

இந்த விஜயத்தின் போது, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி இரண்டு போர் வீரர்களின் நடமாடும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இரண்டு மின்சார சக்கர நாற்காலிகளை வழங்கினார். மேலும், நலவிடுதியில் பணிபுரியும் உதவியாளர்களுக்கு 30 உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி போர் வீரர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன் குறித்து விசாரித்தார். போர் வீரர்களின் படைப்பாற்றல் திறமைகளை அவர் பாராட்டியதுடன், கைவினைப்பொருட்களில் அவர்களின் திறமையை பாராட்டினார். பின்னர் இந்த நிகழ்வின் நினைவாக குழுப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.