Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

01st November 2024 10:38:52 Hours

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையரால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நன்கொடை

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவினரால் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் கரந்தெனியவை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கும் 50 அத்தியாவசிய மகப்பேறு உதவிப் பொதிகளை 26 ஒக்டோபர் 2024 அன்று படையணி தலைமையகத்தில் வழங்கினர்.

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது தாய்மார்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்கும் வகையில் 2 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியினால் காலை உணவு, காலை தேநீர் மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. வைத்தியர் டி. பிரணீத் அவர்கள் கர்ப்பத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பு தொடர்பான அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவுரையை வழங்கினார். அதைத் தொடர்ந்து தாய்மார்களை ஈர்க்கக்கூடிய கேள்வி மற்றும் பதில் அமர்வும் இடம்பெற்றது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.