Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

02nd November 2024 11:18:07 Hours

இலங்கை சமிஞ்சை படையணி சேவை வனிதையரால் சிப்பாயின் குடும்பத்திற்கு தையல் இயந்திரம்

இலங்கை சமிஞ்சை படையணி சேவை வனிதையர் பிரிவு நான்கு பிள்ளைகளின் தாயான ஒரு சிப்பாயின் மனைவிக்கு வீட்டு அடிப்படையிலான வியாபாரத்தை தொடங்குவதற்கு ஆதரவாக, 2024 ஒக்டோபர் 31 ஆம் திகதி சமிஞ்சை பாடசாலையில் தையல் இயந்திரம் ஒன்றை வழங்கியது.

மேலும் அவர்கள் வழங்கிய நன்கொடைப் பொதியில் பலவிதமான வண்ண நூல்கள் மற்றும் அவரது பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் இருந்தன. சிறு பிள்ளைகளின் ஊட்டச்சத்து தேவையை உணர்ந்து, பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இந்த ஆதரவு மாதாந்த பங்களிப்பாக தொடர்ந்து வழங்கப்படும்.