31st October 2024 20:09:01 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 ஒக்டோபர் 29 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் 60 கர்ப்பிணிப் பெண் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான அடிப்படை மகப்பேறு பொருட்கள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சி ஒன்று நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வின் போது சத்தான மதிய உணவும் வழங்கப்பட்டதுடன், குழு புகைப்படத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.