Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

29th October 2024 18:03:45 Hours

இலங்கை இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையரினால் புலமைப்பரிசில் வழங்கல்

இலங்கை இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மஹாலேக்கம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஒக்டோபர் 24 ஆம் திகதி கரந்தெனிய இராணுவ புலானய்வு படையணி தலைமையகத்தில் உயிரிழந்த போர்வீரர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது, தரம் – 05 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களும், நிதி உதவிகளும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கோப்ரல் ஈ.கே.எஸ்.எஸ்.லக்ஷனுக்கு அவரது பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை நிறைவு செய்வதற்காக நிதி உதவி வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.