29th October 2024 14:40:12 Hours
இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பனாகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலையில் விசேட சிறுவர் செயற்பாட்டு தினம் ஒன்று ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் படைத் தளபதியும் நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எஎம்கேஜீபீஎஸ்கே அபேசிங்க, மற்றும் இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியில் கடமையாற்றும் அதிகாரிகள், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்களின் 100 பிள்ளைகள் கலந்து கொண்டனர். சிறார்களுக்கு குழுப்பணியில் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. இலங்கை அறக்கட்டளையின் பயிற்சி மற்றும் விளையாட்டு விஞ்ஞான விரிவுரையாளரான திரு. ஆர்.எம்.ரோஹான் ரத்நாயக்க அவர்களுடன் இணைந்து இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.
அன்றைய தினம் சிறார்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் இடம்பெற்றது. ஒவ்வொரு சிறுவர்களுக்கும் ஒரு சிறப்பு டி-சர்ட் மற்றும் வண்ணமயமான ஸ்மார்ட் கைக்கடிகாரம் வழங்கப்பட்டது, செயல்பாடுகளின் போது சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு சிறப்பு மதிய உணவும் வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.