29th October 2024 14:44:56 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டல் மற்றும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்களின் மேற்பார்வையில் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 25 ஒக்டோபர் 2024 அன்று கம்புருபிட்டிய அபிமன்சல II க்கு விஜயம் செய்தனர்.
நிகழ்வின் போது இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதி கலந்து கொண்டவர்களிடம் உரையாற்றி, அங்கு வசிக்கும் போர் வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், பங்கேற்பாளர்கள் தேநீர் விருந்து மற்றும் நேரடி இசைக்குழு நிகழ்ச்சியை வழங்கினர். 13 போர்வீரர்களுக்கு அத்தியாவசியப் பொதிகள், அவர்களைப் பராமரிப்பவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்பவற்றையும் தலைவி வழங்கினார்.
வருகையின் நிறைவாக தலைவி அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.