28th October 2024 13:44:15 Hours
2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி சத்துரி சுமேதா அவர்கள் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
நடைபெற்ற இந்நிகழ்வின் போது, தலைவி தனது புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.