27th October 2024 19:48:00 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், 2 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் தேவையுடைய சிப்பாய்க்கு ஒரு வீடு கட்டப்பட்டது. 2024 ஒக்டோபர் 22 ஆம் திகதி குளியாப்பிட்டியவில் இந்த வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவர் திருமதி ஜானகி லியனகே அவர்கள் வீடு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வின் போது, பயனாளிகளுக்கு அத்தியாவசிய பரிசுப் பொதிகள் மற்றும் சுவர் வண்ணப்பூச்சுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும், ஏனெனில் இது இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியினால் நிர்மாணிக்கப்பட்ட முதல் வீடாகும்.
நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பயனாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.