26th October 2024 23:01:15 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஓய்வுபெற்ற அதிகாரவனையற்ற அதிகாரி ஒருவரின் பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட வீடு முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு 16 ஒக்டோபர் 2024 அன்று தம்பகொடவில் உத்தியோகபூர்வமாக குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
இந் நிர்மாணப்பணிகளுக்கு 4 வது இலங்கை பொறியியல் சேவைகள் படையணி மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி படையினர் உதவியை வழங்கினர். நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.