Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

23rd October 2024 19:19:19 Hours

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையரின் சிறுவர் தின கொண்டாட்டம் 2024

2024 ஆண்டு சிறுவர் தினத்தை ஒட்டி, இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் 2024 ஒக்டோபர் 19 அன்று சிப்பாய்களின் கல்வி பயிலும் 30 பிள்ளைகளுக்கு எழுதுபொருள் மற்றும் புத்தக நன்கொடை வழங்கல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு வருடத்திற்கான அத்தியாவசிய எழுதுபொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் மற்றும் ரூ. 5,000 மதிப்புள்ள DSI பரிசு வவுச்சர் மற்றும் வண்ணமயமான குடையும் வழங்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. மேலும், பங்கேற்பாளர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.