Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

24th October 2024 17:29:56 Hours

கஜபா படையணி சேவை வனிதையரினால் நன்கொடை வழங்கல்

2024 ஒக்டோபர் 14 அன்று உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில் சாலியபுரவில் உள்ள மித்ரா சிறுவர் இல்லத்தில் நன்கொடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வு கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியங்கா விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் கஜபா படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடப்ளியூடப்ளியூடப்ளியூடப்ளியூசிபி விக்ரமசிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின் போது 30 மாணவர்களுக்கு பாடசாலை பொருட்கள் மற்றும் இனிப்பு பண்டங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.