Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

21st October 2024 19:19:26 Hours

இலங்கை பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையரினால் உலர் உணவு பொருட்கள் வழங்கல்

இலங்கை பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பொறியியல் சேவைகள் மத்திய பணிமனையானது 16 ஒக்டோபர் 2024 அன்று ஹோமாகம ஹபரகடவில் உள்ள பொறியியல் சேவைகள் மத்திய பணிமனை வளாகத்தில் உலர் உணவுப் பொதி நன்கொடை நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த முயற்சி பொறியியல் சேவைகள் மத்திய பனிமனையில் சேவையாற்றும் படையினரில் புதிதாக குழந்தை பேறு பெற்றவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். சிரேஷ்ட அதிகாரிகள், பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.