15th October 2024 21:02:23 Hours
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு 2024 ஒக்டோபர் 5 ம் திகதி கொமாண்டோ படையணி குடும்பங்களின் பிள்ளைகளுடன் கொமாண்டோ படையணி நீச்சல் தடாக கட்டிடத்தில் தொடர் நிகழ்வுகளுடன் சிறுவர் தினத்தினை கொண்டாடியது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிமாலி ரணதுங்க அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான வேடிக்கையான நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், பரிசுப் பொதிகள் வழங்கல் என்பன இடம்பெற்றன. சுற்றாடல் தொடர்பிலான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், ராகம கொமர்ஷல் வங்கியின் முகாமையாளர் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன், சிறுவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிறுவர்கள் பங்குபற்றினர்.