15th October 2024 21:08:40 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலுகா நாணயக்கார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 12 ஒக்டோபர் 2024 அன்று இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவினரால் அம்பேபுஸ்ஸ படையணி தலைமையகத்தில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பரிசுப் பொதிகள் வழங்கும் நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன. இதனிடையே, சிறார்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தென்னம் பிள்ளைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிறுவர்கள் கலந்துகொண்டனர்.