Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

15th October 2024 11:35:29 Hours

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையரால் நன்கொடை திட்டம்

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலந்தி வனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தம்புள்ளை ஸ்ரீ ஜினரத்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் 12 ஒக்டோபர் 2024 அன்று சிரமதானம் மற்றும் நன்கொடை வழங்கும் நிகழ்வு இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவு மற்றும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டது.

தம்புள்ளை மாநகர சபையின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் 30 சிறார்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது. இம் முயற்சியானது 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.