15th October 2024 12:45:25 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்களின் கருத்திற்கமைய இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 05 ஒக்டோபர் 2024 அன்று 2 வது (தொ) இராணுவ மகளிர் படையணியில் கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் 7வது இலங்கை இராணுவ மகளிர் படையணி, 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணிகளின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் 50 பிள்ளைகளுக்கான பொழுதுபோக்கு அமர்வு இடம்பெற்றது. இந் நிகழ்வின் போது தலைவியினால் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.