Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

13th October 2024 11:26:33 Hours

பாங்கொல்ல போர் வீரர்களை பார்வையிட இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி விஜயம்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி பாங்கொல்ல அபிமன்சல - 3 க்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியை நலவிடுதியின் போர் வீரர் ஒருவர் தாம்பூலம் வழங்கி வரவேற்றார்.

அவரது விஜயத்தின் போது, நீர் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் நீச்சல் குளத்தைப் பராமரிப்பதற்கான அத்தியவசிய துப்புரவுப் பொருட்கள் மற்றும் சிறப்பு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன. அதற்காக அபிமசல - 3 இன் தளபதி, தலைவிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன், அவருக்கு பாராட்டுச் சின்னத்தையும் வழங்கினார்.

பின்னர் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி போர் வீரர்களை பார்வையிட்டதுடன், அவர்களின் தேவைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் நினைவாக குழு படம் எடுத்துகொள்ளப்பட்டது.

போர்வீரர்களின் ஆக்கத்திறன்களை பாராட்டிய தலைவி, அவர்களின் கைவினைப் பொருட்களைப் பாராட்டினார்.

மேலும், திருமதி ஜானகி லியனகே அவர்கள், வளாகத்தில் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிக்கப்படும் காகித மறுசுழற்சி திட்டத்தையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.