Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

09th October 2024 18:40:24 Hours

விசேட படையணி சேவை வனிதையர் பிரிவினரால் நன்கொடை திட்டம்

விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 06 ஒக்டோபர் 2024 அன்று சீதுவை விசேட படையணி தலைமையகத்தில் நன்கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தலைமையகப் படையணியில் பணிபுரியும் 20 சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நன்கொடைகளுக்கு மேலாக, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு விசேட பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.