11th October 2024 14:20:57 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சந்தி ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் சிறுவர் தின நிகழ்ச்சி கட்டுநாயக்க, 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியில் 06 ஒக்டோபர் 2024 அன்று நடைபெற்றது. 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்.ஏ. உடரட்டகே மற்றும் அவரது துணைவியார் திருமதி சந்திமா உடரட்டகே ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வின் போது, பிரபல கலைஞரும் நுன்கலை பணிப்பாளருமான திரு.சமன் குணவர்தன அவர்களினால் விசேட நிகழ்வு நடாத்தப்பட்டது. தொடர்ந்து முதியவர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.