08th October 2024 15:54:02 Hours
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தமயந்தி பண்டாரநாயக்க அவர்களின் தலைமையில் 2024 ஒக்டோபர் 5 ம் திகதி மலியதேவ அனாதை இல்லத்தின் 23 சிறுவர்களுக்கு கொழும்பு நகரத்திற்கான விசேட சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்றைய பயணத்திட்டத்தில் தெஹிவளை மிருகக்காட்சிசாலை, தாமரை கோபுரம் மற்றும் கேஎப்சீ (KFC) மெரைன் டிரைவில் மதிய உணவு, அதைத் தொடர்ந்து காலி முகத்திடலில் விளையாடுதல் ஆகியவை அடங்கியிருந்தன.
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களால் சிறுவர்களுக்கு நன்கொடையாக காலணிகள் மற்றும் பரிசுப் பொதிகள் வழங்கியதுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.