Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

07th October 2024 17:55:41 Hours

கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி பதவியேற்பு

கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியாக திருமதி பிரியங்கா விக்கிரமசிங்க அவர்கள் 2024 ஒக்டோபர் 04 ஆம் திகதி கஜபா படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிய தலைவி தனது பொறுப்பை ஏற்றதும், கடந்த கால நிகழ்வுகளின் போது உறுதுணையாக இருந்த படையணியின் பணியாளர்கள் மற்றும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் அவற்றை வெற்றிகரமாக நடாத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டார்.