Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

04th October 2024 19:09:37 Hours

திஸாவெவயில் புனர்நிர்மாணிக்கப்பட்ட வெகோனர்ஸ் விடுமுறை விடுதி திறப்பு

3 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 3 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி படையினரால் திஸாவெவ வெகோனர்ஸ் விடுமுறை விடுதியை புனர்நிர்மாணம் செய்தனர். இதன் திறப்பு விழா 28 செப்டெம்பர் 2024 அன்று நடைப்பெற்றது.

போர் கருவி பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏகே ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷாந்தி ராஜபக்ஷ அவர்களுடன் இணைந்து இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வின் போது, டெக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம் மரணத்திற்குப் பின் கோப்ரல் எம்ஜிஎல் தேசப்பிரிய குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. இவர் மாலி ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் பணியின் போது காலமானவர். இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கினார்.