03rd October 2024 15:30:01 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தியத்தலாவ 2(வது) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் 29 செப்டம்பர் 2024 அன்று நலன்புரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந் நிகழ்வில் இராணுவத்தினர் 2 வது (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி மற்றும் மின்சார மற்றும் இயந்திர பொறியியலில் நிலையத்தில் சேவையாற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையரால் பிரிவின் பொருளாளர் திருமதி சியாமா ஹெட்டிகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பொருளாதார சிரமத்தை கருத்திற் கொண்டு படையினர், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.