Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

03rd October 2024 15:24:15 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ‘ வெட்லேண்ட் கபே ’ திறந்து வைப்பு

இராணுவ சேவை வனிதையர் பிரிவு சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பீஎல்சி உடன் இணைந்து இராணுவ தலைமையக நடைப் பாதைக்கு அருகில் புதிதாக நிறுவப்பட்ட "இராணுவ சேவை வனிதையர் பிரிவின் “வெட்லேண்ட் கபே” 01 ஒக்டோபர் 2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார். விரு கெகுலு பாலர் பாடசாலையின் 450 இற்கும் மேற்பட்ட சிறார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த இடம் சமூக நலனை ஊக்குவிக்கவும் பொது பயன்பாட்டிற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ திறப்பு விழாவைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கான பல விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன, மேலும் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்குபற்றிய சிறார்களுக்கும் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் மூலம் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.

அதன் பின்னர் தலைவி அவர்கள் சிறார்களுடன் குழு படம் எடுத்துக்கொண்டார். பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.