02nd October 2024 19:21:40 Hours
சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு இராணுவ சேவை வனிதையர் பிரிவு, 2024 ஒக்டோபர் 01 ம் திகதி கொழும்பில் அமைந்துள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் சிறுவர்களுக்கான விசேட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வு, பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியையும் ஆதரவையும் தருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்நிகழ்ச்சியின் போது பிள்ளைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளை தலைவி வழங்கினார். பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.