01st October 2024 14:50:55 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த பொதுக் கூட்டம் 2024 செப்டம்பர் 30ம் திகதி இராணுவ தலைமையகத்தில் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவிகள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைப்பெற்றது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் தலைமையில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பாடல் இசைக்கப்பட்டதுடன் உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் அடங்கிய ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவம் அடிப்படையில் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்களின் விபரம் பின்வருமாறு:
உப தலைவி - திருமதி நிலுகா நாணயக்கார
உதவிச் செயலாளர் - திருமதி.சுவேந்திரினி ரொட்ரிகோ
மக்கள் தொடர்பு அதிகாரி– திருமதி பிரியங்கா விக்கிரமசிங்க
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அதிகாரி – திருமதி. சுரங்கி அமரபால
முழு திட்ட பொறுப்பதிகாரி - திருமதி வருணி குலதுங்க
இதன்போது உரையாற்றிய இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி, எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார். தொடர்ந்து, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி நந்தனி சமரக்கோன் அவர்கள் முன்னைய கூட்டத்தின் அறிக்கையை வாசித்ததுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பொருளாளர் மேஜர் பீ.ஜி.பீ.சீ குமாரி அவர்கள் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.
இராணுவத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் வருடாந்த செயற்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் தலைவி வலியுறுத்தினார். தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள, 30 சிவில் ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. மேலும், 30 இராணுவத்தினர் மற்றும் சிவில் ஊழியர்களின் சிறுவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
அதன் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் நிர்வகிக்கப்படும் மெனிங் டவுன் சேவை வனிதையர் வரவு செலவு திட்ட நிலையம் தற்போது யூனிலீவரில் இருந்து சலவை தூள்களை விற்பனை செய்து வருகிறது. மூன்று மாத காலப்பகுதியில் சவர்க்காரப் பொருட்களை கொள்வனவு செய்தவர்களுக்கான குலுக்கல் நடாத்தப்பட்டதுடன், இக் குலுக்கலில் அதிர்ஷ்டசாலியான அதிகாரவாணையற்ற அதிகாரி II ஆர்எச்எஸ்எம் திலகரத்ன அவர்கள் வெற்றியாளராக யுனிலீவர் வழங்கிய குளிர்சாதனப் பெட்டியைப் பெற்றுக்கொண்டார்.
மாதாந்த பொதுக் கூட்ட நிறைவின் போது பங்கேற்பாளர்களுக்கு தேநீர் விருந்து வழங்கப்பட்டதுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.