30th September 2024 18:09:00 Hours
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி நிலந்தி வனசிங்க அவர்கள் 2024 செப்டெம்பர் 26 அன்று படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
புதிய தலைவி நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந் நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.