29th September 2024 15:12:49 Hours
இலங்கை சமிஞ்சை படையணி சேவை வனிதையர் பிரிவு அதன் நலன்புரி திட்டத்தின் கீழ் 2024 செப்டம்பர் 26 ஆம் திகதி இலங்கை சமிஞ்சை படையணியின் சிவில் ஊழியரான திரு. நந்தன அமரசிங்க அவர்களுக்கான ஒரு முழுமையான வீட்டை கட்டி முடித்தது.
இலங்கை சமிஞ்சை படையணியில் ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக சேவையாற்றிய திரு. அமரசிங்க அவர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில், படையணியின் படைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு முன்னர், திரு. அமரசிங்க மற்றும் அவரது குடும்பத்தினர் மரச் சுவர்களைக் கொண்டு கட்டப்பட்ட வீட்டில் வசித்து வந்தனர். இந்த முன்முயற்சி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் மேம்படுத்தியுள்ளதுடன், தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை இத்திட்டம் வழங்குகிறது. ஒருவர் தற்போது பாடசாலையில் செல்கின்றார் மற்றையவருக்கு ஒன்றரை வயதாகும்.
புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் ஒரு வரவேற்பறை, விராந்தை, இரண்டு படுக்கையறைகள், ஒரு குளியலறை மற்றும் ஒரு சமையலறை உள்ளது. இலங்கை சமிஞ்சை படையணியில் பணியாற்றி ஓய்வுபெற்ற உறுப்பினர்கள் மற்றும் பிற நலன்விரும்பிகளின் பங்களிப்புகளுடன், இலங்கை சமிஞ்சை படையணி படையினரின் மனிதவளத்தில் ஆறு மாதங்களுக்குள் இத்திட்டம் முடிக்கப்பட்டது.
குடும்பத்திற்கு மேலும் ஆதரவளிக்கும் வகையில், சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களால் தளபாடங்கள் மற்றும் வீட்டுப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இலங்கை சமிஞ்சை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் அதன் ஏனைய அங்கதவர்களின் பங்குபற்றலுடன் வீட்டின் திறப்பு விழா இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மங்கல விளக்கு ஏற்றுதல் மற்றும் சமய நிகழ்வுகள் இடம்பெற்றன. மதகுருமார்களிடம் ஆசிர்வாதம் பெற்று, சுப நேரத்தில் குடும்பம் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தது.