28th September 2024 20:50:47 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 25 செப்டம்பர் 2024 அன்று இந்திரா புற்றுநோய் நற்பணி மற்றும் சுவ அரணவுக்கு விஜயம் மேற்கொண்டனர். புற்றுநோய் சிகிச்சைக்கு உட்பட்ட ஒரு வயது முதல் பதினாறு வயது வரையிலான பிள்ளைகளின் நல்வாழ்வை அவர்களின் குடும்பத்தினருடன் மதிப்பீடு செய்வதில் இந்த விஜயம் கவனம் செலுத்தியது.
பிள்ளைகளுக்கான இசை நிகழ்ச்சி மற்றும் பாடல் பாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து தலைவியினால் அத்தியாவசிய பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், மருத்துவ உதவிக்காக ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.கே.ஜி.பீ.எஸ்.கே அபேசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.