20th September 2024 13:55:39 Hours
திருமதி தமயந்தி பண்டாரநாயக்க அவர்கள் விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக 18 செப்டம்பர் 2024 அன்று விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
அவர் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் உத்தியோகபூர்வே ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
நிகழ்வில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் ரூ. 45,000 க்கு பெறுமதியான டிஎஸ்ஐ பரிசு கூப்பன்கள் விஜயபாகு காலாட் படையணியின் மறைந்த லான்ஸ் கோப்ரல் ஆர்ஏஜே ஏக்கநாயக்க அவர்களின் நான்கு பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டன.