11th September 2024 06:36:41 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்களின் தலைமையில் 2ம் கட்ட உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றது. இந்த முயற்சியானது இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியில் பணியாற்றும் வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பொருளாதார சுமையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டதுடன், 125 பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையரின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது 10 ஆகஸ்ட் 2024 அன்று 16 நபர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
எஞ்சிய 109 பொதிகள் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி பாடசாலையின் தளபதி , படைத் தளபதி, நிலைய தளபதி மற்றும் அனைத்து கட்டளை அதிகாரிகளின் ஆதரவுடன் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படையலகுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.